பக்கம் எண் :

542சித்தர் பாடல்கள்

மின்னே எரிந்தெழுந்த மேகம்போல் மெய்குளிர்ந்து
தன்னை அறிந்த தளதளத்தாள்.             பொன்னனையாள்

75
  
பக்குவத்தை நோக்கிமுகம் பார்த்துப் பரிமளிக்க
முக்குணமும் கற்ற முதுகிழவி                   தொக்கறுத்து

76
  
மின்னே அமுதம் விளைந்த மனக்கமலப்
பொன்னே உறுதியுள்ள புத்திகேள்                பன்னரிய

77
  
வேத புராணர் வெறும்பிலுக்காய் உன்கமலப்
பாதம் பணிவர்முகம் பாராதே                       நாதத்

78
  
துரியமணி வாசலிலே தோன்றிமுகம் சத்தே
தெரியநின்று பின்னை உள்ளே சென்று             அரிதாகச்

79
  
சாற்றுஞ் சரியைச் சளுக்கர் உனைத்தழுவப்
போற்றுவார் அங்கவர்பின் போகாதே                ஏற்றும்

80
  
அவலக் கிரியை அசடர் உருனை மேவக்
கவலைப் படுவார் கடத்திச்                      சிவயோக

81
  
ஆதியர்கள் வந்துன் மலரடியைத் தெண்டனிட்டால்
பேதியாது உள்ளழைத்துப் பேசிக்கொள்                ஆதி

82
  
தவஞான மோனத் தனக்காரர் வந்தால்
அவமானம் பண்ணாது அழைத்துச்            சிவபொருளைத்

83
  
தேடாத மூடரிடம் சிக்காதே சிந்தையிலே
நாடாத வஞ்சரிடம் நத்தாதே                      கோடாத

84
  
சாத்திரத் தூரித்தர்தமைச் சாராதே தக்கமிடும்
கோத்திரப் பஞ்சியளைக் கூடாதே                  சூத்திரப்

85
  
பொய்வீணர் ஆசை பொருந்தாதே புத்தகப்பேய்
மெய்வீணர் ஆசை விரும்பாதே                  கையோகக்

86
  
காமத்துக்கு ஆன கலாதிவேள் நூல்கற்ற
வாமத்தார் பால்மனது வையாதே                நாமமிட்டுப்

87
  
பஞ்சரிக்கும் பாசிப் பதப்பிலுக்கர் வந்தக்கால்
நெஞ்செரியத் தள்ளிவிடு                        நில்லாமல்

88