சஞ்சலந் தனைப்பிரிந்து சித்தாதிகள் தாள்பணிந் தேன் நான் துணிந்தே. | 4 |
| | |
சரியையுங் கிரியையும் விட்டு அப்பாற் சாதனாமா யோகமதின் பாதம் அதைத்தொட உரியா தீதம்வெளிப்பட் டங்கு சும்மாயிருந் ததைச்சொல்ல எம்மாலாகுமோ. | 5 |
| | |
பராபர வெளிகைக்கொண்டு மனம்ஒன்றிப் பற்றிடவே சிற்பரத்தின் உற்பனங் கண்டு நிராதர மான பண்டு நீங்கா ஆனந்தரசம் பாங்கதாய் உண்டு. | 6 |
| | |
அடிநடு முடிவு கண்டேன் மோனநிலை அறிந்து கொண்டேன் ஞானந் தெரிந்துகொண்டேன் முடிவில்லாப் பரப்பிரம சொரூபத்தை முற்றும் கண்டேன் இகப்பற்றும் விண்டேன். | 7 |
| | |
சுத்தப் பரவெளியே ஒளியாகத் தோன்றிட மெய்ஞ்ஞானச் சுகமடைந்தேன் சத்துச்சித் தானந்தத்தைத் தெரிசிக்கச் சகலமும் பிரமமயம் புகலரிதே. | 8 |
| | |
நாசிமுனை நடுவில் விளங்கிய நயனத்திடை ஒளியாம் பரவெளியில் தேசிகன்திருக் கூத்தை தெரிசித்தே மோனநிலை பரிசமுத்தே. | 9 |
| | |
நினைவே கனவெனவும் தெளிந்தந்த நினைவையும் மறந்தெழு கலைமறந்தே தனதெனும் தனைமறந்தே சுத்த சாகரத்தில் உழலாத பாகந் துறந்தே. | 10 |
| | |
ஓமென்ற பிரணவத்தை இன்னதென உண்மைகண்ட பின்புவெகு நன்மையும் பெற்றேன் நாமெனும் அகங்காரந் தனைவிட்டு நாட்டந் தெரிந்து கொண்டேன் தேட்டமுடனே | 11 |