ஆசையை விட்டுஒளிந்து விரிந்தோடும் ஐம்புலனைத் தான் அறுக்குந் தெம்பை அளித்துப் பாசந் தனைக்கடந்து குருசொல் படிதவ றாமல்அப் படிநடந்து. | 12 |
| | |
கவனக் குளிகை கொண்டு அதனாலே ககனமார்க்கந் தனிலே அகனமாய்ச்சென்று தவமுறு மா சித்தர்கள் வாழ்கின்ற சதுரகிரிக்குப் போய் குதூகலித்தேன். | 13 |
| | |
தவசுப் பாரையின்மேல் இருக்கிற சாமிபர ஞானநவ சித்தருடனே சிவசொரூ பம்தெரிந்தேன் மனதினில் தீபவொளி கண்டபின்பு ஆவலும் விண்டேன். | 14 |
| | |
மூலாதாரந் தெரிந்தேன் தெரிந்ததந்த முச்சுடரின் தீபவொளி கண்டுமகிழ்ந்தேன் நாலா கலையறிந்தேன் என்பாட்டன் நந்தீசர் கிருபையால் சந்தோடம் கொண்டேன். | 15 |
| | |
யோகாம் அனுபவமறிந்தே மணிபூரகம் உத்தமர்க்குச் சித்தியென மெத்தவுங் கண்டேன் சாகா திருந்திடவே விசுத்திநிலை தன்னில் இருந் தன்னிலையே நன்னிலையதாய். | 16 |
| | |
கண்டதே அங்கு நின்றேன் சிவசத்தி கற்பனையது தென்றுமகிழ்ந் தப்புறஞ்சென்றேன். பண்டுஅன்னைஉமையகட்கு அருளிய பாதைகண்டு ரசபான போதையும் உண்டேன். | 17 |
| | |
ஆரும் அறிய ஒண்ணாப் பூரணத்து ஆச்சரியங் கண்டபின்பு பேச்சடங்கினேன். சீருஞ் சிறப்பும் மிக்க மனோன்மணி தேவிஅருளால் அறிந்து மேவிக்கொண்டேன். | 18 |
| | |
காமியங் கடந்தவிடம் தினந்தினம் கண்டறிந்து கொண்டேன்முனி அண்டர்புகழும் | |