வாமியிவள் எனப்பேர் நன்றாக வாங்கிக் கொண்டேன்பரத் தோங்கிக் கொண்டேன். | 19 |
| | |
நாதாந்த மோனமெனும் நிலைகண்டு நானிருந்தேன் உறக்கமூனு மற்றேன். வேதாந்த வழியறிந்தேன் அஞ்ஞான வீட்டைக் கடந்துமேலாம் வீட்டையுங்கண்டேன். | 20 |
| | |
சாத்திரம் பலபடித்தேன் பொல்லாச் சண்டாளர் சவகாசந் தன்னை மறந்தேன் பாத்திரம் அறிந்து கொண்டேன் அவருடன் பத்தியொடு சேர்க்கைசெய்து முத்தியைக்கண்டேன். | 21 |
| | |
உப்பிட்ட பாண்டமிது வந்தவழி வந்தவழி உண்மைதெரி யாதமாந்தர் நன்மையீதென்று செப்புக் குயமானார் ஆசைகொண்டு தேசமதிலே அலைந்து பாசத்து உழல்வார். | 22 |
| | |
நிலையிலாப் பொய்க்கூடு இத்தேகம் நிச்சயம தற்றதென் அச்சமதோடு மலைகுகை தனில் ஏகி சிவஞான மார்க்கம் தெரிந்ததின் நேர்க்கையாகி. | 23 |
| | |
ஆங்காரமும் ஒழித்தேன் உண்மைநிலை அறிந்திடும் நொண்டியெனச் சிறந்திழித்தேன் பாங்காம் நிலைதெரிந்தேன் குருசொன்ன பரப்பிரம சொரூபத்தின் தெளிவறிந்தேன். | 24 |
| | |
தன்னையும் தானுணர்ந்தேன் எட்டுத் தலங்களும் ஒன்பது வாசல் உணர்ந்தேன் பின்னுமக் கதவடைந்தேன் மேலாம் பெருவழி .ஊடுசென்று திருவடைந்தேன். | 25 |
| | |
மாதா மனோன்மணியாள் பீடமதில் மணிச்சத்தத் தொனியது கணகணன நாதகீ தங்கேட்டுச் சிவதிரு நடனக்கண் காட்சியை உடனே கண்டேன். | 26 |