பக்கம் எண் :

558சித்தர் பாடல்கள்

விட்டகுறைவாராமல் மெய்ஞ்ஞானம் தேராமல்
     தொட்டகுறை ஆனதினால் - ஞானம்மா
     தோன்றுமெய்ஞ் ஞானமடி.
4
  
தம்முளம் அறியாமல் சரத்தைத்தெரியாமல்
     சம்சாரம் மெய்யென்று - ஞானம்மா
     சாகரத்திலே உழல்வார்.
5
  
இட்டர்க்கு உபதேசம் எந்நாளும் சொல்லிடலாம்
     துட்டர்க்கு உபதேசம் - ஞானம்மா
     சொன்னால் வருமோசம்.
6
  
முத்தி பெறுவதற்கும் முதலாய் நினைத்தவர்க்கும்
     நித்திரையும்விட்டு - ஞானம்மா
     நினைவோடு இருக்கணுமே.
7
  
நினைவைக் கனவாக நீயெண்ணியே பார்க்கில்
     சினமாய்வரும் எமனும் - ஞானம்மா
     தெண்டநிட்டுப் போவானே.
8
  
யோக விளக்கொளியால் உண்மை தெரியாமல்
     மோகம் எனும் குழியில் - ஞானம்மா
     மூழ்கியேபோவார்கள்.
9
  
சாத்திரம் கற்றறியாத சாமியார் தானாகி
     ஆத்திதேட நினைத்து - ஞானம்மா
     அலைவார் வெகுகோடி.
10
  
பூச்சும்வெறும்பேச்சும் பூசையும் கைவீச்சும்
     ஏச்சுக்கு இடந்தானே - ஞானம்மா
     ஏதொன்றும் இல்லையடி.
11
  
கலத்தை அலங்கரித்துப் பெண்கள் தலைவிரித்து
     கணக்கைத் தெரியாமல் - ஞானம்மா
     கலங்கி அழுதாரடி.
12
  
மேளங்கள் போடுவதும் வெகுபேர்கள் கூடுவதும்
     நாளை எண்ணாமலல்லோ - ஞானம்மா
     நலிந்தே அழுவாரடி.
13