கோவணமும் இரவல் கொண்டதூலம் இரவல் தேவமாதா இரவல் - ஞானம்மா தெரியாதே அலைவாரே. | 14 |
| |
செத்தவரை மயானம் சேர்க்கும்வரையில் ஞானம் உத்தமர்போலப் பேசி - ஞானம்மா உலகில் திரிவாரடி. | 15 |
| |
காட்டில் இருந்தாலுங் கனகதவஞ் செய்தாலும் காட்டில் குருவில்லாமல் - ஞானம்மா கண்டறிதல் ஆகாதே. | 16 |
| |
நல்ல வெளிச்சமது ஞான வெளிச்சமது இல்லாவெளிச்சமது - ஞானம்மா ஈனவெளிச்சமடி. | 17 |
| |
சம்சாரமென்றும் சாகரமாமென்றும் இம்சையடைவோர்கள் - ஞானம்மா இருந்து பயன் ஆவதென்ன. | 18 |
| |
காத்தடைத்து வந்ததிது கசமாலப் பாண்டமிது ஊத்தச் சடலமிது - ஞானம்மா உப்பிலாப் பொய்க்கூடு. | 19 |
| |
அஞ்சுபேர்கூடி அரசாளவே தேடி சஞ்சாரஞ் செய்ய - ஞானம்மா தானமைத்த பொய்க்கூடே. | 20 |