தாயிஉமை மனோன்மணியாள் எனக்கு சொன்னசித்தைத் தானறிந்து நடந்து கொள்வோம் பெரியோரை அடுத்தே. | 5 |
| |
நிலையைக்கண்டு கொள்வதற்கு நினைந்துஉருகி வாடி நிர்மலமாம் ஐயன்பதம் தினந்தினமுந் தேடி கலைஅறிந்து வாசியையும் கட்டுடனே பிடித்தோம் கனல் எழுப்பி மூலமதைச் சுகமுடனேபடித்தோம். | 6 |
| |
ஊணுறக்கம் நீக்கியல்லோ யோகநிட்டை புரிந்தோம் உற்றாரைப் பற்றறுத்து மலைக்குகையில் இருந்தோம் காணுதற்கும் எட்டாத பரவெளியைக் கண்டோம் கற்பமது சாப்பிட்டு உடல்வளர்த்துக் கொண்டோம் | 7 |
| |
தந்தைதாயார் சுற்றமொடு தளர்ந்துஉற வாடோம் தவநிலையைப் பெற்றுணராச் செய்கையைத் தேடோம் விந்தையுடன் ஞானமதை மேன்பாடாய்த் தெரிந்தோம் மேலான பரவெளியின் அருளதனை அறிந்தோம். | 8 |
| |
நாசிநுனி வழியதனில் நாட்டமதைத் தெரிந்தோம் நல்லதொரு மூலவட்டம் சுழியை அறிந்தோம் வாசியேற்ற வகையறிந்து ஆசைகளை அறுப்போம் வையகத்தின் செய்கைதன்னை வழுவாமல் மறுப்போம். | 9 |
| |
சக்திசக்ர பீடமேறிச் சுத்தவெளியைக் கண்டோம் சகலமும்பரவெளி என்று எண்ணி மனமதனில் கொண்டோம் சித்திபெற்ற முத்தர்களை எத்தினமும் அறிவோம் சீவகலை இன்னதென்று நாட்டமுடன் தெரிவோம். | 10 |
| |
தொண்ணுத்தாறு தத்துவத்து உரைத்தனங்களைக் கொண்டோம் தய்யபர வெளிதனிலே அய்யர்பதம் கண்டோம் விண்ணுலகு இன்னதென்று அறிந்து கொண்டேன் யானே மேலான பரவெளியின் ஒளிவைக்கண்டுதானே. | 11 |
| |
நானென்ற ஆணவத்தை நயந்தறுத்து விடுத்தேன் நன்மைபெற்றுக் குகைதனிலே வாழ்ந்திருக்க அடுத்தேன் தானென்ற கருவமதைத் தணித்து விட்டு வந்தோம் தவமேதான் கதி என்று சரவழியில் உகந்தோம். | 12 |