தீராத புயல்களெல்லாம் தினமுண்டாகும் தீக்கங்கு எரிமலைகள் சிரிப்புக் கூடும் தேராத நோய்களெலாம் தின முண்டாகும் திசைகலங்கும் பூகம்பத் திறமே சாடும் நேரான நெறியெல்லாம் நடுங்கி யோடும் நெறியில்லா நெறியெல்லாம் நிறைந்தூ டாடும் போராகக் குருதிகொப் பளித்துப் பொங்கும் புகையாகப் புவனவளம் புதைந்து போகும். | 16 |
| |
தெய்வமெலாம் விண்ணாடிப் போகும் போகும் தீமையெலாம் மண்ணகத்தின் தெருக்கூத் தாகும் உய்யுமுண்மை யுளத்துண்மை யோடிப் போகும் உலகவுண்மை விஞ்ஞானம் கூடிவேகும் ஐயமில்லை யெனவகங்கா ரந்தான் துள்ளும் ஐயையோ அகிலமெலாம் கள்ளம் கள்ளம் துய்யநெறி காட்டிநின்றார் சித்தர் சித்தர் தூலநெறி காட்டுகின்றா ரெத்தர் ரெத்தர். | 17 |
| |
விஞ்ஞான விதியெல்லாம் வேகம் வேகம் வேகமினல் தாமத்தின் வித்தை வித்தை அஞ்ஞான விதியெல்லாம் போகம் போகம் அடடாடா கயிறறுந்த பொம்ம லாட்டம் செய்ஞ்ஞானக் கதியெல்லா மரண வத்தின் செயலன்றி வேறில்லை சென்மம் சென்மம் மெய்யான விதியெல்லாம் யோகம் யோகம் மின்னான சக்தியுடன் சாகம் சோகம். | 18 |
| |
வித்தென்பான் முனையென்பான் மின்வீச் சென்பான் வெப்பென்பான் காந்தத்தின் கப்பே யென்பான் வித்தையடா விண்ணெல்லாம் சுழலும் மார்க்கம் விந்தையடா ஆகர்ஷண வியப்பே யென்பான் வெத்தறிவாம் கனியறியான் மேற்றோ லுண்பான் விஞ்ஞானி யவனறிவைப் பழிக்க வில்லை சித்தறிவான் சத்தறிவான் சித்தன் சித்தன் சித்தத் திலேசிருட்டிச் சித்தங் காண்பான். | 19 |