பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்585


அடடாடா விஞ்ஞானி யறையக் கேளாய்
     யாவைக்கும் காரணத்தை அறிவா யோநீ
அடடாடா வகிலாண்டக் கவர்ச்சி யேனோ?
     அணுவுக்குள் மின்காந்த மமைந்த தேனோ?
கெடடாடா நேர்நிரையான் வின்க ளேனோ?
     குவிந்திணைந்து பிரிந்தரனா யனமு மேனோ?
விடடா யிவையெல்லாம் மென்னே யென்னே!
     விளக்கிடுவாய்க் களக்கமறச் சொன்னேன்.
20
  
வெத்துலக விதியெல்லாம் வெப்பம் தட்பம்
     விஞ்ஞான விதியெல்லாம் சேர்ப்பும் கூர்ப்பும்
செத்துலக விதியெல்லாம் யாதம் கூதம்
     சீவனுடல் விதியெல்லாம் காமம் கோபம்
சத்துலக விதியெல்லாம் சகசம் சாந்தம்
     தான்தானாத் தன்மயமாத் தழைவே தாந்தம்
சித்துலக விதிசத்தி னோடு சித்தாய்ச்
     சேரனந்தத் தானந்தச் சீராம் வேராம.
21
  
வேரறியா வினைவறியும் விஞ்ஞானந்தான்
     வேரறிந்தே விளையாடும் மெய்ஞ்ஞானந்தான்
சார்பறியுஞ் செயலறியும் விஞ்ஞானந்தான்
     சார்ப்புதஞ் சாரமதே மெய்ஞ்ஞானந்தான்
ஈரறியு மீர்மையெலாம் விஞ்ஞானந்தான்
     இருமையெலா மொருமையுறல் மெய்ஞ்ஞானந்தான்
பாரறியும் பேதநெறி விஞ்ஞானந்தான்
     பரமறியும் போதநெறி மெய்ஞ்ஞானந்தான்.
22
  
காமத்தை விட்டிடடா கலகத்தை வெட்டிடடா
     கருநொச்சிக் கவசத்தில் காமினியைக் கட்டிடடா
ஊமைக்கும் அத்தையடா உலகோர்க்கு நத்தையடா
     உரையெல்லாம் மித்தையடா உனக்கவளே வித்தையடா
சாமத்தைக் கண்டிடடா சர்மத்தை வென்றிடடா
     சகலத்தை யுந்தழுவும் சத்தியத்தில் நின்றிடடா
வாமத்தி யருளாலே வாதத்தி லேவெற்றி
     மண்ணேல்லாம் பொன்னாகும் மார்க்கத்தைக் கண்டிடடா.
23