பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்587


பத்தனடா சித்தனடா பரம யோகி
     பார்பிழைக்க வேயிந்நூல் பகருகிறேன்
பித்தனடா பித்தியவள் சித்தத்தாலே
     பேயன்யான் பேத்தலிவைப் பேணிப் பார்ப்பீர்
வித்தனடா வேதனடா வேதாந்தத்தின்
     வித்தையுறும் வேதையெலாம் விரிவாச் சொன்னேன்
இத்ததையி லிந்நூலைப் போலே யில்லை
     இதுகண்டார் வாதமுடன் வேதை கண்டார்.
28