பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்589


மழலையர் கையிலுட் காவடி கொடுத்து
     மலையின் மேல் ஏற்றலும், இவைதாம்
வழிபடு முறையோ? இதுகொலோ சமயம்?
     மடமைகண் டிரங்குமென் நெஞ்சே.
4
  
நீட்டிய பல்லும் சினமடி வாயும்
     நிலைத்தவோர் கல்லுரு முன்னே
கூட்டமாய் மோதிக் குடிவெறித் தவர்போல்
     குதிப்பர் தீ வளர்த்ததில் மிதிப்பார்
ஆட்டினைத் துடிக்க வெட்டிவீழ்த் திடுவார்
     ஆங்கதன் உதிரமும் குடிப்பார்
காட்டில் வாழ் காலக் கூத்துகொல் சமயம்?
     கண்ணிலார்க் கிரங்குமென் நெஞ்சே!
5
  
உடுக்கையை அடித்தே ஒருவன்முன் செல்வான்
     ஒருவன்தீச் சட்டியும் கொள்வான்
எடுத்ததோர் தட்டில் பாம்புருத் தாங்கி
     இல்தொறும் சென்றுமுன் நிற்பார்
நடுக்கொடும் தொழுவார் நங்கையர், சிறுவர்,
     நல்குவர் காணிக்கை பலவும்
கொடுத்தநீ றணிவார் இதுகொலோ சமயம்?
     குருடருக் கிரங்குமென் நெஞ்சே!
6
  
வேப்பிலைக் கொத்தும், விரிதலை மயிரும்
     வெவ்விதின் மடித்திடு வாயும்
கூப்பிய கையும் கொண்டவள் ஒருத்தி
     குரங்கென ஆடுவள் குதிப்பாள்
நாற்புறம் நின்றே வணங்குவர் மாக்கள்
     நற்குறி கேட்டிட நிற்பார்
காப்பதோ வாழ்வை? இதுகொலோ சமயம்?
     கண்ணில்லார்க் கிரங்குமென் நெஞ்சே!
7
  
தாய்மொழி பேணார்; நாட்டினை நினையார்
     தம்கிளை, நண்பருக் கிரங்கார்
தூய்நல் அன்பால் உயிர்க்கெலாம் நெகிழார்
     துடிப்புறும் ஏழையர்க் கருளார்