நின்றிருந்த சோதியை நிலத்திலுற்ற மானிடர் கண்டறிந்து கண்குளிர்ந்து காதலுற்று உலாவுவோர் கண்டமுற்ற மேன்முனையின் காட்சி தன்னைக் காணுவார் நன்றியற்று நரலைபொங்கி நாதமும் மகிழ்ந்திடும். | 358 |
| | |
வயங்குமோனச் செஞ்சுடர் வடிந்தசோதி நாதமும் கயங்கள் போலக் கதறியே கருவூரற்ற வெளியிலே பங்கொடின்றி இன்றியே படர்ந்துநின்ற பான்மையை நயங்கள் கோவென்றே நடுங்கி நங்கையான தீபமே. | 359 |
| | |
தீபஉச்சி முனையிலே திவாகரத்தின் சுழியிலே கோபமாறு கூவிலே கொதித்துநின்ற தீயிலே தாபமான மூலையில் சமைந்துநின்ற சூக்ஷமும் சாபமான மோட்சமும் தடிந்துநின்று இலங்குமே. | 360 |
| | |
தேசிகன் கழன்றதே திரிமுனையின் வாலையில் வேசமோடு வாலையில் வியனிருந்த மூலையில் நேசசந்தி ரோதயம் நிறைந்திருந்த வாரமில் வீசிவீசி நின்றதே விரிந்துநின்ற மோனமே. | 361 |
| | |
உட்கமல மோனமில் உயங்கிநின்ற நந்தியை விக்கலோடு கீயுமாகி வில்வளைவின் மத்தியில் முட்பொதிந்தது என்னவே முடுகிநின்ற செஞ்சுடர் கட்குவைகள் போலவும் கடிந்துநின்ற காட்சியே. | 362 |
| | |
உந்தியில் சுழிவழியில் உச்சியுற்ற மத்தியில் சந்திரன் ஒளிகிரணம் தாண்டிநின்ற செஞ்சுடர் பந்தமாக வில்வளைவில் பஞ்சபூத விஞ்சையாம் கிந்துபோலக் கீயில்நின்று கீச்சுமூச்சு என்றதே. | 363 |
| | |
செச்சையென்ற மூச்சினோடு சிகாரமும் வகாரமும் பச்சையாகி நின்றதே பரவெளியின் பான்மையே இச்சையான ஹு விலே இருந்தெழுந்த ஹீயிலே உச்சியான கோணத்தில் உதித்ததே சிவாயமே. | 364 |
| | |
ஆறுமூலைக் கோணத்தில் அமைந்த வொன்ப தாத்திலே நாறுமென்று நங்கையான நாவியும் தெரிந்திட | |