கூறுமென்று ஐவரங்கு கொண்டுநின்ற மோனமே பாறுகொண்டு நின்றது பறந்ததே சிவாயமே. | 365 |
| | |
பறந்ததே கறந்தபோது பாய்ச்சலூர் வழியிலே பிறந்ததே பிராணன்அன்றிப் பெண்ணும் ஆணும் அல்லவே துறந்ததோ சிறந்ததோ தூயதுங்கம் ஆனதோ இறந்த போதில் அன்றதே இலங்கிடும் சிவாயமே. | 366 |
| | |
அருளிருந்த வெளியிலே அருக்கன்நின்ற இருளிலே பொருளிருந்த சுழியிலே புரண்டெழுந்த வழியிலே தெருளிருந்த கலையிலே தியங்கிநின்ற வலையிலே குருவிருந்த வழியினின்று ஹு வும் ஹீயுமானதே. | 367 |
| | |
ஆனதோர் எழுத்திலே அமைந்துநின்ற ஆதியே கானமோடு தாலமீதில் கண்டறிவது இல்லையே தானந்தானும் ஆனதே சமைந்தமாலை காலையில் வேனலோடு மாறுபோல் விரிந்ததே சிவாயமே. | 368 |
| | |
ஆறுகொண்ட வாரியும் அமைந்துநின்ற தெய்வமும் தூறுகொண்ட மாரியும் துலங்கிநின்ற தூபமும் வீறுகொண்ட போனமும் விளங்குமுட் கமலமும் மாறுகொண்ட ஹூவிலே மடிந்ததே சிவாயமே. | 369 |
| | |
வாயில் கண்ட கோணமில் வயங்குமைவர் வைகியே சாயல் கண்டு சார்ந்த துந்தலைமன்னா யுறைந்ததும் காயவண்டு கண்டதும் கருவூரங்கு சென்றதும் பாயுமென்று சென்றதும் பறந்ததே சிவாயமே. | 370 |
| | |
பறந்ததே துறந்தபோது பாய்ச்சலூரின் வழியிலே மறந்ததே கவ்வுமுற்ற வாணர்கையின் மேவியே பிறந்ததே இறந்தபோதில் நீடிடாமற் கீயிலே சிறந்துநின்ற மோனமே தெளிந்ததே சிவாயமே. | 371 |
| | |
வடிவுபத்ம ஆசனத்து இருத்திமூல அனலையே மாருதத்தி னாலெழுப்பி வாசலைந்து நாலையும் முடிவுமுத்தி ரைப்படுத்தி மூலவீணா தண்டினால் முளரியால யங்கடந்து மூலநாடி ஊடுபோய். | 372 |