அம்பரத்தில் ஆடுஞ்சோதி யானவன்னி மூலமாம் அம்பரமும் தம்பரமும் அகோரமிட்டு அலர்ந்ததும் அம்பரக் குழியிலே அங்கமிட் டுருக்கிட அம்பரத்தில் ஆதியோடு அமர்ந்ததே சிவாயமே. | 388 |
| | |
வாடிலாத பூமலர்ந்து வண்டுரிசை நாவிலே ஓடிநின்று உருவெடுத்து உகாரமாய் அலர்ந்ததும் ஆடியாடி அங்கமும் அகப்படக் கடந்தபின் கூடிநின் றுலாவுமே குருவிருந்த கோலமே. | 389 |
| | |
விட்டடி விரைத்ததோ வேருருக்கி நின்றதோ எட்டிநின்ற சீவனும் ஈரேழ்லோகங் கண்டதோ தட்டுருவ மாகிநின்ற சதாசிவத் தொளியதோ வட்டவீடறிந்த பேர்கள் வானதேவ ராவரே. | 390 |
| | |
வானவர் நிறைந்த சோதி மானிடக் கருவிலே வானதேவர் அத்தனைக்குள் வந்தடைவர் வானவர் வானகமும் மண்ணகமும் வட்டவீடு அறிந்தபின் வானெலாம் நிறைந்துமன்னு மாணிக்கங்கள் ஆனவே. | 391 |
| | |
பன்னிரண்டு கால் நிறுத்திப் பஞ்சவர்ணம் உற்றிடின் மின்னியே வெளிக்குள்நின்று வேரிடத்து அமர்ந்ததும் சென்னியாம் தலத்திலே சீவனின்று இயங்கிடும் பன்னியுன்னி ஆய்ந்தவர் பரப்பிரம மானதே. | 392 |
| | |
உச்சிகண்டு கண்கள் கட்டிஉண்மைகண்டது எவ்விடம் மச்சுமாளி கைக்குள்ளே மானிடம் கலப்பிரேல் எச்சிலான வாசல்களும் ஏகபோக மாய்விடும் பச்சைமாலும் ஈசனும் பரந்ததே சிவாயமே. | 393 |
| | |
வாயிலிட்டு நல்லுரிசை அட்சரத் தொலியிலே கோயிலிட்டு வாவியுமங் கொம்பிலே உலர்ந்தது ஆயிலிட்ட காயமும் அனாதியிட்ட சீவனும் வாயுவிட்ட வன்னியும் வளர்ந்ததே சிவாயமே. | 394 |
| | |
அட்சரத்தை உச்சரித்து அனாதியங்கி மூலமாம் அட்சரத்தை யுந்திறந்த சோரமிட்ட லர்ந்ததும் | |