பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 101

போரே உன்றன் விருப்பம் ஆயின்
       போவாய் நரகிற்கே!
நேரே இன்று கண்டாய் அன்றோ
       நேர்மை வீரர்தமை?
வேரே சாய்ந்து வீழ்தல் உண்மை!
       வெறியர் சூதெல்லாம்
யாரே வெல்வார் சோவியத் மண்ணை?
       அஃதோர் விண்ணன்றோ?

‘சோவியத் நாடு’ - 1960

குறிப்பு: லாக்ஹிட் ‘யு - 2’ ரகத்தைச் சேர்ந்த அமெரிக்க இராணுவ 
விமானம் ஒன்று (1960) மே முதல் நாள் காலையில் சோவியத் 
பிரதேசத்தின் மீது பறந்து சென்ற போது சுட்டு வீழ்த்தப்பட்டது. 
அந்த வரலாற்றுச் செய்தியைப் பறைசாற்றுகிறது இப்பாடல்.