பக்கம் எண் :

122தமிழ்ஒளி கவிதைகள்2

விண்ணகங் காண
       விளங்கிய பந்தரில்
மண்ணகங் காண
       மனையில் அமர்ந்தார்!

அக்கணம் பேரூர்
       அதன் அருகுற்ற
சுக்கிரன் சேரி
       சுடுதழல் பற்றி,
எரிந்தது மாந்தர்
       இதயம் நடுங்க!
எரிந்தது, சேரி
       இருந்தவர் வாழ்வு!

காற்றொடு கதறல்
       ககனம் கிளம்ப
ஆற்றொணாத் துயராய்
       அடர்ந்தது புகையே!
கண்ணொடு கண்ணும்
       கரத்தொடு கரமும்
பெண்ணொடு பற்றும்
       பெரும்புகழ்க் கண்ணன்

காற்றும் புகையும்
       கதறலும் கண்டு
நேற்றும் இன்றும்
       பழகிய நட்பால்
சேரியில் வாழும்
       சிறுவரின் அன்பால்
மாரிப் பறையன்
       மகனிடம் கொண்ட