(வேறு)
பள்ளியில் என்னொடு பாடம் படித்ததும்
பாரினில் மீண்டுமென் நட்பை வளர்த்ததும்
தெள்ளிய நீருள் தெரிந்த மணல்எனச்
சிந்தனை நீரில் தெரிந்திடு கின்றன!
கள்ளவிழ் மென்மல ரொத்த முகத்தினன்
கண்ணனை நெஞ்சம் மறப்பதும் எங்ஙனம்?
புள்ளென மேதினம் வந்திசை பாடிடும்
பொங்கு மகிழ்ச்சியில் சோகம் கலந்திடும்!
(வேறு)
அணி பெறும் தோப்பும்
அழகுநெல் வயலும்
மணிப்புனல் ஆறும்
மண்ணில் தவழ்ந்த
பேரூர் தன்னில்
பிறந்தனன் கண்ணன்;
ஊரூர் எல்லாம்
ஒளிபெறும் பேராய்!
வாலிபன் கண்ணன்
வரும்வழி நோக்கிய
சேலெனும் விழியாள்
சித்திரம் போன்றாள்
ராதையை நாளும்
நாடிடக் கண்ணன்
காதலும் வளர்ந்து
கடிமணம் கோரி,
|