பக்கம் எண் :

54தமிழ்ஒளி கவிதைகள்2

அவன்விடுங் கண்ணீர் ஆறாய்ப் பெருகி
உன்னிடம் வந்தோர் உதவியைத் தேடும்!

செல்வரின் கப்பல் சென்றிடும் போழ்து
புயற்படை கொண்டு, புலியெனப் பாய்ந்து
அடித்ததை வீழ்த்தி, அனர்த்தம் இழைத்து
ஊழியாய்ச் சீறி உதவிசெய் வாயே!

‘முன்னணி’ - 1949