பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 65

ஆதலின் நானிங் கொளிந்திருப்பேன், பின்னர்
ஐந்தாறு நாளில் அகன்றிடு வேன்!”

என்று சொலும்மகன் இன்முகத்தை, அவள்
ஏறிட்டுப் பார்த்துக் கண்ணீர் சொரிந்தாள்!

நாட்கள் சிலசெல்ல வேகமுடன், ஒரு
நாள்வந்து நின்றது சோக முடன்!

கூட்டி லிருந்தொரு குஞ்சு பிரிந்திடும்
கொள்கை யெனமகன் நீங்கிச் சென்றான்!

அன்னவன் காலடி மறையுமுனம், அங்கே 
ஆந்தையைப் போல்சிலர் ஓடி வந்தார்

“இங்குன் மகனும் ஒளிந்திருந்தான், எமை
ஏமாற்றி நீயிங் கொளித்து வைத்தாய்;

அந்தப் பயலுக்குச் சோறுமிட்டாய், மிக
ஆபத்தான குற்றம் செய்து விட்டாய்!”

என்று விறைத்திடும் சிப்பாய்களை, அவள்
ஏறிட்டுப் பார்த்தனள் கோபத் துடன்;

கோடைப் பகல்வெய்யில் சுட்டதுபோல் நெஞ்சில்
கோபம் கொதித்தது சாப மிட்டாள்;

மூச்சும் பேச்சும் அவன் எய்துமுனம், ஒரு
முந்நூறு நாளாக நான் அவனைப்

பத்திரமாக ஒளித்து வைத்தேன்; மண்ணைப்
பார்க்க அவன்ஒரு நாள் பிறந்தான்!`

பாம்புக்குப் பாலிடும் மாந்தைரையும் இங்குப் 
பாதகர் என்பவர் யாரு மில்லை!

பாம்பல்ல, என்னுடை அன்புமகன்; அவன்
பாயும் விலங்கல்ல, ஆசை மகன்!