பக்கம் எண் :

86தமிழ்ஒளி கவிதைகள்2

சிந்திய ரத்தம்
நிறைந்த பெருங்கடல்
சீறி அடிக்காதோ? - தடையை
மீறி அடிக்காதோ?

என்று சுதந்திரம்
என்று பெருந்திசை
சென்று முழக்கிடுதல்? - உரிமை
வென்று முழக்கிடுதல்?

கொன்று குவிப்பவர்
இன்று பொடிப்பொடி
என்று பறக்காதோ? - நம்கொடி
சென்று பறக்காதோ?

‘சாட்டை’ - 1955