கதை சொல்லும் அண்ணன்
மாலை நேரம் ஆனது.
மணியும் ஐந்து அடித்தது.
சோலை நோக்கிப் பிள்ளைகள்
துள்ளி ஓடி வந்தனர்.
வண்ணச் சோலை அதனிலே
மாம ரத்தின் அடியிலே
அண்ணன் ஒருவர் இருந்தனர்.
அவரே அருணன் என்பவர்.
அருணன் அருகே சென்றதும்
“அண்ணா, வணக்கம்” என்றனர்.
உரிமை யோடே அருணனை
ஒன்று கூடி மொய்த்தனர்.
தோளில் கோபு சாய்ந்தனன்.
சுந்தர் மடியில் அமர்ந்தனன்.
காலில் ஏறி வேணுவும்
கட்டிப் பிடித்துக் கொண்டனன்.
|