பையன்
காரில் ஏறிச் சென்றி
ருந்தால்
காற்றாய்ப் பறக்குமே?
ஆமையார்
காட்டு வழியில் நின்று விட்டால்
மோச மாகுமே!
பையன்
ரயிலில் ஏறிச் சென்றி ருந்தால்
நன்மை யாகுமே?
ஆமையார்
நடுவ ழியில் கவிழ்ந்து போனால்
நாச மாகுமே!
பையன்
சரி, சரி என் சைக்கிள் பின்னால்
ஏறிக் கொள்ளுவீர்.
சரச ரென்றே ஓட்டிடுவேன்
விரைவில் செல்லுவீர்.
ஆமையார்
என்ன! ஒரு சைக்கிளிலே!
இரண்டு பேர் போவதா? ஐயையோ! வேண்டாம்,
வேண்டாம்,
போலீஸ்காரர் பிடித்துக் கொள்வார்
இரண்டு பேரையும்.
போதும், போதும், நடந்தே செல்வேன்.
வணக்கம் அப்பனே!
("சைக்கிளில் ஒருவர்தான் போகலாம்" என்ற சட்டம் இருந்தபோது எழுதப்
பெற்றது இப்பாடல்.)
|