பக்கம் எண் :

மலரும் உள்ளம்129

ஆமையாரின் அவசரம்

பையன்

ஆமையாரே, ஆமையாரே,
எங்கே போகிறீர்?
அவசரமாய்ப் போகிறீரோ,
சொல்லுமே ஐயா.

ஆமையார்

அருமையுள்ள பேரனுக்குத்
திருமணம் என்றே
அவசரமாய்த் தந்திஒன்று
வந்த தப்பனே.

பையன்

வண்டி கட்டிச் சென்றி ருந்தால்
வசதி யாகுமே?

ஆமையார்

வண்டி மாடு படுத்துக் கொண்டால்
நேர மாகுமே!