ஏழைச்சிறுவன்
காசே இல்லை கையிலே.
களிப்பும் இல்லை மனத்திலே.
ஆசை மட்டும் இருக்குதே!
அதனால் எதனை வாங்கலாம்?
பட்டுச் சொக்காய் அணியவும்,
பட்ச ணங்கள் தின்னவும்
பட்டாஸ் வாங்கிக் கொளுத்தவும்
பாழும் ஆசை தூண்டுதே!
தெருவில் உள்ளோர் யாவரும்
சிரித்தே ஆடித் திரிகையில்,
ஒருவன் மட்டும் மூலையில்
ஒதுங்கி இருந்து அழுவதோ?
அரக்கன் அழிந்த நாளென
ஆடிப் பாடிப் போற்றுவோர்
வறுமை என்னும் அரக்கனை
வாழ விடுதல் நீதியோ?
|