இன்பமாக உண்ணலாம்
வாழைக்காய் வேணுமா?
வறுவலுக்கு நல்லது.
கொத்தவரை வேணுமா?
கூட்டுவைக்க நல்லது.
பாகற்காய் வேணுமா?
பச்சடிக்கு நல்லது.
புடலங்காய் வேணுமா?
பொரியலுக்கு நல்லது.
தக்காளி வேணுமா?
சாம்பாருக்கு நல்லது.
ஃ ஃ ஃ
இத்தனையும் வாங்கினால்,
இன்றே சமையல் பண்ணலாம்.
இன்றே சமையல் பண்ணலாம்.
இன்ப மாக உண்ணலாம்.
|