பக்கம் எண் :

142மலரும் உள்ளம்

கண்கள் இரண்டும் சிவக்கவே,
   காதும் நிமிர்ந்து நிற்கவே
என்ன கோபம், கோபமோ!
   எங்கே அவைகள் போகுமோ!

சீன வெடியைக் கொளுத்தியே
   சின்னப் பூனைக் குட்டிமேல்
சீனு போட்டு விட்டதால்
   தேம்பித் தேம்பி அழுததாம்.

அண்ணன் மாரி டத்திலே
   அழுது கொண்டே வந்ததாம்.
கண்ணீர் வழிய நடந்ததைக் 
   கலக்கத் தோடே சொன்னதாம்!

கேட்ட வுடனே அண்ணன்மார்
   கிளம்பி விட்டார்; சீனுவின்
வீட்டைத் தேடிச் செல்கிறார்.
   மேலே என்ன நடக்குமோ?