ஏமாற்றம்
இரண்டு மாத விடுமுறையும்
இனிமை யாகக் கழிந்ததுவே.
பள்ளிக் கூடம் திறந்ததுவே,
பரீட்சை முடிவும் தெரிந்ததுவே.
"எட்டாம் வகுப்பைக் கடந்தோம்நாம்.
இனிமேல் பயமே இல்லை"யென
எண்ணிக் கொண்டே வீடடைந்தேன்,
என்றும் இல்லா மகிழ்வுடனே.
ஃ ஃ ஃ
மறுநாள் பள்ளி செல்லுகையில்,
வழியில் உள்ள கடைதனிலே,
கண்டேன், அழகிய புத்தகமே,
காசைக் கொடுத்து வாங்கினனே.
வாங்கிப் படித்துக் கொண்டேநான்
மகிழ்வுடன் பள்ளி வந்தடைந்தேன்.
|