குட்டிப்
பென்சில்
சாது வான நமது காந்தி
தமது
அறையி னுள்ளே
ஏதோ ஒன்றைத் தேடித் தேடி
இங்கு
மங்கும் பார்த்தார்.
ஆர்வ மாக அந்த அறையை
அலசிப் பார்க்க லானார்.
கூர்ந்து மூலை முடுக்கு யாவும்
குனிந்து
பார்த்தும் காணோம்!
அனையி னுள்ளே சீடர் ஒருவர்
அந்தச்
சமயம் வந்தார்.
“சிரமப் பட்டே எந்தப் பொருளைத்
தேடு
கின்றீர்?” என்றார்.
“சின்னப் பென்சில் ஒன்றை நானும்
தேடு
கின்றேன் இங்கே.
என்னை அதுவும் ஏய்த்து விட்டே
எங்கே
சென்ற” தென்றார்.
|