கரடி, சிங்கம், புலியுடனே
காட்டில்
உள்ள மிருகமெலாம்
அருகில் உள்ள நகருக்குள்
அதிகா
லையிலே புகுந்திடலாம்.
தூங்கி எழுந்து மனிதரெலாம்
சோம்பல் முறிக்கும் வேளையிலே
வேங்கை போலே நாமெல்லாம்
"விர்"ரெனப் பாய்ந்து கொன்றிடலாம்.
ஆளுக் கொருவரை நாம்கொன்றால்
அப்புறம் மனிதர் யாரிருப்பார்?
நாளைக் காலையே கிளம்பிடலாம்.
நமக்குக் கவலை இனியில்லை.”
நரியின் பேச்சைக் கேட்டதுமே,
“நல்லது. யோசனை நல்ல” தெனக்
கரடி சிங்கம் புலிகளெலாம்
களிப்பாய் ஏற்றுக் கொண்டனவே.
மறுநாள் காலை மணிஇரண்டு.
வந்தன மிருகம் யாவையுமே.
திரண்டு கிளம்பிச் சென்றனவே,
திமுதிமு வென்றே நகர்நோக்கி.
|