பக்கம் எண் :

170மலரும் உள்ளம்

காவல் காரர் உடைகள் யாவும் 
   கந்தல் கந்தல் ஆன தாலே,
பாவம், பிச்சைக் காரர் போலப் 
   பார்க்கும் போதே தோன்ற லானார்!

இதனைக் கண்ட காகம் ஒன்று,
   “இந்தச் சமயம் இவர்க்கு நாமும் 
உதவி செய்தால் பயமில் லாமல் 
   உலவ லாமே” என்று கருதி,

அருகில் உள்ள வீட்டிற் குள்ளே
   யாரும் இல்லா வேளை சென்று 
கறுப்புக் கோட்டு, சிவப்புச் சட்டை,
   கட்டிக் கொள்ளச் சரிகை வேட்டி

எடுத்து வந்து காவல் காரர் 
   இருக்கும் இடத்தில் போட்டு விட்டே,
“உடுத்திக் கொள்வீர்” என்று சொல்லி 
   ஒதுங்கி நின்று பார்த்த தங்கே.

காவல் காரர் பழைய உடையைக் 
   கழற்றிக் கீழே போட வில்லை
ஆவ லோடு புதிய உடையை 
   அணிய வில்லை; அசைய வில்லை!