பக்கம் எண் :

மலரும் உள்ளம்179

அழியாச் செல்வம்

எட்டய புரத்து மன்னருடன்
   இனிதாய்க் காலம் கழித்திடவே,
பட்டணம் சென்றனர் பாரதியார்,
   பலநாள் சென்று திரும்பினரே.

வாசலில் குதிரை வண்டியுமே
   வந்து நின்றதைக் கண்டதுமே,
ஆசையாய் வாசலை நோக்கிவந்தார்
   அவரது மனைவி செல்லம்மா.

வண்டியை விட்டே பாரதியார்
   மகிழ்வுடன் கீழே இறங்கிவந்தார்.
வண்டியி லிருந்த பொட்டணங்கள்
   வந்தன பாரதி பின்தொடர்ந்தே!

"பட்டுப் புடவை, பாத்திரங்கள்,
   பற்பல நல்ல பொருள்களுமே
பொட்டணத் துள்ளே இருக்கு"மெனப் 
   பிரித்துமே பார்த்தனர் செல்லம்மா.