பக்கம் எண் :

208மலரும் உள்ளம்

ஒருமுழ மூக்கு

ஒருவன் மூக்கு
ஒருமுழ நீளம்.

அருகில் போனால்
ஆளைக் குத்தும்,

தெருவில் நடந்தே
செல்லும் சமயம்,

"அருகில் வந்தால்
ஆபத்" தென்றே

அறிவித் திடவே
அவனும் நினைத்தான்

கண்டா மணியைக்
கயிற்றில் கட்டி

நன்றாய் மூக்கின்
நடுவில் மாட்டி

"டண்டாண் டண்" என
நடக்கும் போதே

அண்டையில் வருவோர்
அறியச் செய்தான்!