பக்கம் எண் :

24மலரும் உள்ளம்

வெள்ளைக் கன்றுக்குட்டி

வெள்ளை வெள்ளைக் கன்றுக் குட்டி
   மிகவும் நல்ல கன்றுக் குட்டி.
துள்ளிக் குதிக்கும் கன்றுக் குட்டி.
   சோம்பல் இல்லாக் கன்றுக் குட்டி.

அம்மா என்னும் கன்றுக் குட்டி.
   ஆசை யான கன்றுக் குட்டி.
சும்மா சும்மா தலையை ஆட்டிச் 
   சொல்வ தென்ன கன்றுக் குட்டி ?

உன்னைப் போல வேக மாக 
   ஓடு வேனே கன்றுக் குட்டி.
என்னைத் துரத்திப் பிடிக்க வருவாய்.
   எங்கே பார்ப்போம், கன்றுக் குட்டி.