பக்கம் எண் :

மலரும் உள்ளம்25

தோசை நல்ல தோசை

தோசை நல்ல தோசை - அம்மா 
   சுட்டுத் தந்த தோசை.
ஆசை யாக எனக்கே - என் 
   அம்மா தந்த தோசை.

வட்ட மான தோசை - அது
   மாவில் சுட்ட தோசை 
தட்டு நிறைய நிறைய - அம்மா 
   சுட்டுத் தந்த தோசை.

காசு கேட்க வில்லை - என்னைக் 
   காக்க வைக்க வில்லை.
தோசை வேணும் என்றேன் - அம்மா 
   சுட்டுத் சுட்டுத் தந்தாள்.

ஒன்று, இரண்டு, மூன்று - என்றே 
   உன்ளே பிய்த்துப் போட்டேன்.
இன்னும் ஒன்று, ஒன்று - என்றே
   எடுத்து, எடுத்து வைத்தாள்.