பக்கம் எண் :

34மலரும் உள்ளம்

நீருக் குள்ளே நீச்சடிக்கும்
   தவளையாரே - இங்கே 
நிலத்தில் வந்து குதிப்பதேனோ
   தவளையாரே ?

ஊமை போல இருப்ப தேனோ
   தவளையாரே? - சும்மா
உருண்டைக் கண்ணால் பார்ப்பதேனோ
   தவளையாரே?