பக்கம் எண் :

மலரும் உள்ளம்33

தவளையாரே

தத்தித் தத்தி ஓடிவரும் 
   தவளையாரே - கொஞ்சம்
தயவு செய்து நின்றிடுவீர்
   தவளையாரே.

சுத்த மாகத் தினம்குளித்தும்
   தவளையாரே - உடல் 
சொறி சொறியாய் இருப்பதேனோ
   தவளையாரே ?

பூச்சி புழு பிடித்துவரும் 
   தவளையாரே - உம்மைப் 
பிடித்துப் பாம்பு தின்பதேனோ?
   தவளையாரே.

மாரிக் காலம் வந்து விட்டால் 
   தவளையாரே - ஏனோ
வறட்டுக் கத்தல் கத்துகிறீர் 
   தவளையாரே?