பக்கம் எண் :

மலரும் உள்ளம்37

முதல் எழுத்து

காக்கை ஒன்று வந்தது;
காகா காகா என்றது.

குயிலும் அங்கே வந்தது;
குகூ குகூ என்றது.

கிளியும் பறந்து வந்தது;
கிகீ கிகீ என்றது.

முழுப் பெயரையும் சொல்லவே
முடிய வில்லை. ஆகையால்,

முதல் எழுத்தை மட்டுமே
மூச்சுப் பிடித்துக் கூறுமே!