பள்ளிக்கூடப் பை
பள்ளிக் கூடப் பையிலே
பாடப் புத்தகம் இருக்குது.
பாடப் புத்தகம் இருக்குது.
பலகை ஒன்றும் இருக்குது.
பையைத் தோளில் மாட்டுவேன்.
பள்ளிக் கூடம் செல்லுவேன்.
பள்ளிக் கூடம் செல்லுவேன்.
படித்த பாடம் சொல்லுவேன்.
ஆண்டு தோறும் தேறுவேன்.
அறிஞ னாக மாறுவேன்.
அறிஞ னாக மாறுவேன்.
அனைவ ருக்கும் உதவுவேன்.
|