மலர்கள்
காலையில் மலரும் தாமரை காணக் களிப்புடன் வருவீர், தோழியரே. மாலையில் மலரும் மல்லிகை காண மகிழ்வுடன் வருவீர், தோழியரே. அந்தியில் மலரும் அல்லியைக் காண அன்புடன் வருவீர், தோழியரே. எந்தச் சமயமும் சோலையில் வந்தால் இன்பம் பெறலாம், தோழியரே.