பக்கம் எண் :

42மலரும் உள்ளம்

வானவில்

அண்ணா, அண்ணா, வான வில்லின்
   அழகைப் பாராய் அண்ணா.
என்னே அழகு! பார்க்கப் பார்க்க
   இன்பம் தானே அண்ணா.

வானில் அந்த வில்லைத் தூக்கி
   வைத்த தாரோ அண்ணா?
ஏணி மேலே ஏணி வைத்தால்
   எட்டு மோசொல் அண்ணா?

அடுக்க டுக்காய் ஏழு வர்ணம்
   அதனில் தெரியு தண்ணா.
எடுத்து வில்லைப் பிடிப்ப தற்கே
   எவரும் உண்டோ அண்ணா?

எடுத்து வில்லைப் பிடித்த போதும்
   என்ன செய்வ தண்ணா?
தொடுப்ப தற்கே அம்பும் உண்டோ?
   சொல்வாய் அருமை அண்ணா?