நானாக இருந்தால்?
டாக்ட ராக நானிருந்தால்
நாடி பிடித்துப் பார்த்திடுவேன்.
நாக்கை நீட்டு என்றிடுவேன்.
நன்றாய் ஊசி போட்டிடுவேன்.
வாத்தி யாராய் நானிருந்தால்
வகுப்பில் பாடம் நடத்திடுவேன்
பார்த்துப் பரீட்சை எழுதுகிற
பைய னுக்குச் சுழித்திடுவேன்.
வக்கீ லாக நானிருந்தால்
வழக்கை நன்றாய் நடத்திடுவேன்.
டக்டக் கென்று பொய்யர்களை
நாலே கேள்வியில் மடக்கிடுவேன்.
நடிக னாக நானிருந்தால்
நாடகம், சினிமா, வானொலியில்
"அடடா!" என்று மெச்சிடவே
அற்புத மாக நடித்திடுவேன்.
|