என் குதிரை
எங்கள் வீட்டில் ஒருகுதிரை
எனக்கே சொந்தம் அக்குதிரை.
தங்கம் போலே அதன்நிறமாம்.
சவாரி செய்ய உதவிடுமாம்.
கொள்ளும் புல்லும் கேட்காது;
கொடுத்தால் கூடத் தின்னாது;
பல்லைக் காட்டிக் கனைக்காது;
பலமாய்க் காலால் உதைக்காது;
சாட்டை கண்டு மிரளாது;
தரையில் படுத்துப் புரளாது;
காட்டுச் சிங்கம் வந்தாலும்,
கலங்கி ஓடி ஒளியாது.
சண்டித் தனங்கள் செய்யாது;
தள்ளிக் கீழே வீழ்த்தாது;
சண்டை வந்தால் அஞ்சாது;
தலையைத் தொங்கப் போடாது.
|