பக்கம் எண் :

மலரும் உள்ளம்59

முக்கனிகள்

குலைகு லையாய்ப் பழுக்குமாம்.
   கொட்டை இல்லா திருக்குமாம்.
மலிவு விலையில் வாங்கலாம்.
   வாயில் உரித்துப் போடலாம்.

குண்டு குண்டாய் வடிவமாம்.
   கொட்டை நடுவே இருக்குமாம்.
இரண்டு பக்கம் கடிக்கலாம்.
   இனிய சாறு குடிக்கலாம்.

சட்டை முள்ளுச் சட்டையாம்.
   தடித்துப் பருத்து இருக்குமாம்.
வெட்டி எடுத்துச் சர்க்கரைக்
   கட்டிச் சுளையைத் தின்னலாம்.

ஃ ஃ ஃ

முக்கியமாய் நாமும்
   விருப்பமுடன் போற்றும்
இக்கனிகள் மூன்றும்
   முக்கனிகள் ஆகும்.