இரண்டு சக்கர வண்டி
இரண்டு சக்கர வண்டி - நான்
ஏறிச் செல்லும் வண்டி.
குறைந்த விலையில் வாங்கி - நான்
குந்தி ஓட்டும் வண்டி.
எண்ணெய் ஊற்ற வேண்டாம் - அதை
எதுவும் இழுக்க வேண்டாம்.
சின்னச் சந்தில் கூட - நான்
செல்ல உதவும் வண்டி.
வழியை விட்டுச் செல்வீர் - என்று
வாயால் கூற மாட்டேன்.
அழகு மணியைக் கையால் - நான்
அடித்தே விலக வைப்பேன்.
ஒருவர் ஏறிச் செல்ல - நன்கு
உதவும் சைக்கிள் வண்டி.
இருவர் ஏற லாமே - இன்று
இல்லை, போலீஸ் தொல்லை.
|