காந்தி சொல்
காந்திசொல் கேட்டிடுவாய் - அவர்
காட்டும் வழிநடப்பாய்.
சாந்தமாய் வாழ்ந்திடுவாய் - என்றும்
தருமமே காத்திடுவாய்.
மெய்ம்மையே பேசிடுவாய் - அதனால்
மேன்மை அடைந்திடுவாய்.
கைராட்டை சுற்றிடுவாய் - நல்ல
கதரை உடுத்திடுவாய்.
நாட்டிற் குழைத்திடுவாய் - என்றும்
நன்மையே செய்திடுவாய்.
ஏட்டிலே கண்டஉண்மை - தன்னை
ஏற்று நடந்திடுவாய்.
ஏழைக் கிரங்கிடுவாய் - அவர்
இன்னல்கள் போக்கிடுவாய்.
வாழையைப் போலவேநீ - எல்லா
வகையிலும் உதவிடுவாய்.
|