பூனைக்குட்டிகள்
இரண்டு பூனைக் குட்டிகள்
எங்கள் வீட்டில் இருந்தன.
உருண்டு உருண்டு இரண்டுமே
ஓடி ஆடித் திரிந்தன.
தங்கை மீனா ளுடையது
தவிட்டு நிறத்துக் குட்டியாம்.
பொங்கும் பால்போல் இருந்திடும்
பூனை எனக்குச் சொந்தமாம்.
பள்ளி விட்டு வந்ததும்,
பாசத் தோடு பூனைகள்
துள்ளி வந்தே, "மியாவ், மியாவ்
தூக்கு" என்றே சொல்லுமாம்.
ஆளுக் கொன்றாய்த் தூக்குவோம்.
அணைத்துக் கொஞ்சி மகிழுவோம்.
தோளின் மீதும் ஏற்றுவோம்.
சுற்றிச் சுற்றி ஆடுவோம்.
|