பக்கம் எண் :

66மலரும் உள்ளம்

குதிரைச் சவாரி

குதிரை போல நீயுமே
   குனிந்து கொள்வாய், நானுமே
முதுகில் ஏறிக் கொள்ளுவேன்.
   முன்னே ஓடிச் செல்லுவாய்.

நொண்டிக் குதிரை போவே
   நின்று நின்றே போகிறாய்
சண்டித் தனமா செய்கிறாய்?
   சாட்டை அடியா கேட்கிறாய்?

பின்னால் ஏனோ செல்கிறாய்?
   பிடித்துத் தள்ளும் எண்ணமோ?
என்னைக் கீழே வீழ்த்தவா
   இந்த வேலை செய்கிறாய்?

கொள்ளு நிறைய வேணுமா?
   புல்லும் சேர்த்துத் தருகிறேன்.
நல்ல ஜாதிக் குதிரை போல்
   துள்ளிக் குதித்துச் செல்லுவாய்!