ரொட்டி வாங்கிடுவாய்
ரொட்டி வாங்கிடுவாய் - தம்பி
ரொட்டி வாங்கிடுவாய்.
பெட்டிக் குள்ளே இருந்த ரொட்டி.
பிரிய மாக வாங்கும் ரொட்டி.
கெட்டிக் காரப் பிள்ளை யெல்லாம்
கேட்டு வாங்கித் தின்னும் இந்த
ரொட்டி வாங்கிடுவாய் - தம்பி
ரொட்டி வாங்கிடுவாய்.
குறைந்த விலையில் கிடைக்கும் ரொட்டி
குழந்தை யெல்லாம் விரும்பும் ரொட்டி.
விரைந்தே ஓடி வந்தா லன்றி
விற்றுப் போகும்; சொல்லி விட்டேன்!
ரொட்டி வாங்கிடுவாய் - தம்பி
ரொட்டி வாங்கிடுவாய்.
|