கரடி, சிங்கம், புலியை யெல்லாம்
காண லாமே நம்மிடத்தே!
மிரள வேண்டாம், உள்ளே தள்ளி
மென்று தின்று வீர ராக
ரொட்டி வாங்கிடுவாய் - தம்பி
ரொட்டி வாங்கிடுவாய்.
பிச்சை எடுத்துப் பிழைக்க வில்லை.
பிறரை ஏய்த்துத் திருட வில்லை.
இச்சை யோடு பாடு பட்டே
இங்கு நானும் விற்கும் இந்த
ரொட்டி வாங்கிடுவாய் - தம்பி
ரொட்டி வாங்கிடுவாய்.
|