பக்கம் எண் :

மலரும் உள்ளம்77

இறகு

பார்க்கப் பார்க்க அழகுதான்
பளப ளக்கும் இறகுதான்.

ஆற்றங் கரையின் அருகிலே
   அடர்ந்த தென்னந் தோப்பிலே
நேற்றுக் கண்டெ டுத்தது
   நேர்த்தி யான இறகிது.

பார்க்கப் பார்க்க அழகுதான்
பளப ளக்கும் இறகுதான்.

எந்தப் பறவை போட்டதோ?
   எங்கு தேடி அலையுதோ!
சொந்தக் காரப் பறவையே
   வந்து கேட்டால் தருகிறேன்.

பார்க்கப் பார்க்க அழகுதான்
பளப ளக்கும் இறகுதான்.

ஏழு வர்ணம் காட்டிடும் 
   இந்த நல்ல இறகினைக் 
கீழே போட்ட பறவையே
   கேட்டால் உடனே தருகிறேன்.